இராமநாதபுரம் வடக்கு நகர திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா

Update: 2023-06-03 12:00 GMT

 இராமநாதபுரம் வடக்கு நகர திமுக சார்பில் நகர் மன்ர தலைவர் வடக்கு நகர செயலாளர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில், அண்ணா சிலையில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் வடக்கு நகர திமுக சார்பில் நகர் மன்ர தலைவர் வடக்கு நகர செயலாளர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில், அண்ணா சிலையில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருஉருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்பாக அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன் பின்பு ஒடிஷா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.

இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் வருடம் முழுவதுமே நூற்றாண்டு விழாவாக திமுகவினர் கொண்டாட உள்ளனர். திராவிட இயக்கத்தின் கொள்கை , கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்கள் நெஞ்சில் பதிவு செய்யும் வகையில் இது அமைந்திடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது  தமிழக அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாடுவதாக அறிவிப்புகள் வெளியானது..

அதாவது, கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, திமுக குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளை மக்கள் பயன்பெறும் வகையில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்றைய தினம், கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நுடைபெற்றது.. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.. சிறப்பு விருந்தினராக மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பங்கேற்றார். இந்த விழாவில் முடிவுற்ற என பொருள்படும் படியான இலச்சினை வெளியிடப்பட்டது.


Tags:    

Similar News