மண்டபம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் திமுக சுற்றுச் சூழல் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மர கன்றுகள் நடப்பட்டது.

Update: 2021-12-13 06:23 GMT
பைல் படம்.

திமுக இளைஞரணி மாநில செயல் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி, திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 4,400 மரக்கன்றுகள் பணி நவ.25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி, மண்டபம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நகர் திமுக செயலர் ராஜா, கிழக்கு ஒன்றிய செயலர் ஜெ.தெளபீக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், ராமநாதபுரம் நகர் திமுக (வடக்கு) செயலர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்ராஜா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பூவேந்திரன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் நம்புராஜன், தெற்கு மீனவர் சொசைட்டி இயக்குநர் ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் முபாரக், ராஜகோபால், ஜெயந்தி வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முஹமது சலாவுதீன் ஏற்பாடு செய்தார்.

Tags:    

Similar News