நாய் குரைத்ததால் கொலை..! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

நாய் குரைத்ததால் கொலை, குற்றவாளிக்கு ஆயுள். இராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2022-04-13 05:17 GMT

இராமநாதபுரம் பாம்பன் ஜெயில் தெருவை சேர்ந்த மீனவர் மார்டின் மகன் சந்தியாரெனி 21, கடந்த 2013ம் ஆண்டு இவரது வீட்டின் வழியாக அதே பகுதியை சேர்ந்த டேனி, பிச்சை இருவரும் சென்றுள்ளனர். அப்போது சந்தியாரெனி வீட்டில் வளர்த்துவந்த நாய் குரைத்துள்ளது. இதனால். ஆத்திரமடைந்த இருவரும் அன்று மாலை சந்தியாரெனி வீட்டில் இருந்த போது தகராறில. ஈடுபட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிலையில் மதுரை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மூன்று நாட்கள் மருத்துவ மனையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து பாம்பன் போலிசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஒன்பது வருடங்கள் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்று கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார். அதில். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News