தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்

மண்டபம் கடல் பகுதியில் இரட்டை மடி வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-09-10 12:59 GMT

மண்டபம் பகுதியில்  விசைப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்.

மண்டபம் கடல் பகுதியில் இரட்டை வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் இருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன் தினம் கடலுக்குச் சென்றன. அதில் ஒரு சில படகுகள் அரசு தடை செய்த இரட்டை வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மண்டபம் மீன்வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி தலைமையில் மீன்வளத்துறை ஊழியர்கள், மெரைன் போலீசார் ரோந்து படகில் சென்று கரை திரும்பிய படகுகளில் சோதனை செய்தனர். அப்போது அரசு தடை செய்த இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் பாஸ்கரன், தங்கச்சிமடம் ஆரோக்கிய செல்வம் ஆகியோரது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அப்படகுகளில் இருந்த 1.5 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News