இராமநாதபுரம் - முழு ஊரடங்கு - சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது

இராமநாதபுரத்தில் விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு,வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Update: 2021-05-24 07:11 GMT

முழு ஊரடங்கு -இடம் ராமநாதபுரம்.

முழு ஊரடங்கு உத்தரவால் இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும்  மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது

கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் பேருந்து நிலையம், காசுக்கடை பஜார், வண்டிக்காரத் தெரு மற்றும் பாரதிநகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருந்து வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் இன்று பேருந்துகளும் இயங்கவில்லை. மாவட்ட தோட்டக்காகலைத் துறையில் அனுமதி வாங்கிய வாகனங்கள் மட்டும் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் ஊரடங்கு கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மீறி இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு மட்டுமல்லாமல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News