தொழிற்பயிற்சி பழகுநர் வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை

முகாமில் பங்கேற்ற 462 நபர்களில் 135 நபர்கள் பல்வேறு நிறுவனங்கள் மூலமாக தொழிற்பழகுநர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Update: 2023-03-21 08:15 GMT

பைவ் படம்

மண்டல அளவிலான தொழிற்பயிற்சி பழகுநர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தொழிற்பயிற்சி பழகுநர் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேற்று  வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்காக  மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கைக்கான தொழிற் பழகுநர் மேளா புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்தனர். 10,+2, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அதன்படி  நேற்றைய தினம்; நடைபெற்ற முகாமில் 15 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான 912 தொழிற் பழகுநர்களை தேர்ந்தெடுக்க முன் வந்தது நேற்று  நடைபெற்ற முகாமில் பங்கேற்ற 462 நபர்களில் 135 நபர்களை பல்வேறு நிறுவனங்கள் மூலமாக தொழிற் பழகுநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான நியமன ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு   வழங்கினார்.

இம்முகாமில் உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முனைவர்.முருகேசன், மண்டல பயிற்சி இணை இயக்குநர் பி.பரமேஸ்வரி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) .எஸ்.ராமர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் எஸ்.குமரேசன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி பயிற்சி அலுவலர்வி.கலைமணி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்

Tags:    

Similar News