கொரோனா இல்லாத உலகம்: ரமலான் பண்டிகை தொழுகையில் முஸ்லீம்கள் பிரார்த்தனை

கடந்த இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்படவில்லை

Update: 2022-05-03 04:25 GMT

புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

 கொரோனா இல்லாத உலகமாக மாறிட வேண்டும் ரமலான் பண்டிகை தொழுகையில் முஸ்லீம்கள் பிரார்த்தனை செய்தனர்.

தமிழகம் முழுவதும் முக்கியமான பண்டிகையாக கருதப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் ஈடுபடாமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று குறைந்துள்ளதால் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்தத் தொழுகையில் கொரோணா இல்லாத உலகமாக மாற வேண்டும் வைரம் தொற்றில் இருந்து பொதுமக்கள் முழுமையாக குணமடைந்து வரவேண்டும். என்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதத்தில் மழை பெய்வதற்கு இறைவன் அருள்புரிய வேண்டுமென ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

Similar News