சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் விபத்தில் கால்களை இழந்த இளைஞருக்கு நிதி உதவி வழங்கபட்டது.

Update: 2021-09-29 09:42 GMT

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாமமலர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விபத்தில் கால்களை இழந்த இளைஞருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மா மலர் மருத்துவமனை இணைந்து உலக இருதய தினம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் தங்கராஜ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அந்தோணிசாமி, சிவாஜி, செந்தில்வேல் ,கதிரேசன் நகரக் கழகச் செயலாளர் நைனா முகமது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தின் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உலக இருதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் பேரணி புதுக்கோட்டை அரசு பொது அலுவலகத்தில் இருந்து துவங்கி கீழராஜவீதி, மேல ராஜவீதி, பால்பண்ணை ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்தில் வந்து பேரணி முடிவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விபத்தில் கால்களை இழந்த இளைஞருக்கு உதவி செய்யும் விதத்தில் இன்று சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மா மலர் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் செயற்கைக் கால் பொருத்துவதற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதனை கோட்டாட்சியர் அபிநயா இளைஞருக்கு வழங்கினார்.

Tags:    

Similar News