புதுக்கோட்டை யில் விஜய் மக்கள் இயக்க தலைவர் பர்வேஸ் வேட்பு மனு தாக்கல்

புதுக்கோட்டை நகராட்சி 4 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் பர்வேஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

Update: 2022-02-04 06:45 GMT

நகராட்சிக்கு உட்பட்ட 4 வது  வார்டில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பர்வேஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரபரப்புடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News