சுகாதாரக்கேடு நிறைந்த மீன் மார்க்கெட் : நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய நிலை நீடிக்கிறது.

Update: 2021-08-25 08:16 GMT

புதுக்கோட்டை மேல    2- ம் விதியில் சுகாதாரமற்ற முறையில்  வரும் மீன்  மார்க்கெட் 

புதுக்கோட்டை நகராட்சியில் மேல 2-ஆம் வீதியில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மீன் மார்க்கெட் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள இந்த மீன் மார்க்கெட்டிற்கு, நகரின் பல்வேறு பகுதிகளில்  இருந்து, தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். ஆனால், மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், இங்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய நிலை நீடிக்கிறது.

குறிப்பாக, மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையில் சாக்கடை போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீசும் துர்நாற்றம் காரணமாக அனைவரும் முகம்சுழிக்கக்கூடிய நிலை உள்ளது. கழிவு நீர் போல்  தேங்கி நிற்கும் தண்ணீரின் அருகே மீன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களும், வாகனங்களும் இப்பகுதியில் புழங்குவதைப் பார்க்கும்போது, சென்னை கூவம் பகுதியில் இருப்பதைப் போன்ற சூழலை உணரமுடிகிறது. எனவே, சுகாதாரக்கேடுகள் நிறைந்துள்ள இப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News