உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: புதுக்கோட்டையில் மாடு - குதிரை வண்டி பந்தயம்

ஒவ்வொரு பிரிவு போட்டிகளிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டன

Update: 2021-11-28 05:15 GMT

உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளைமுன்னிட்டு  எம்எல்ஏ முத்துராஜா ஏற்பாட்டில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை தொடக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஏற்பாட்டில், மாட்டுவண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மச்சுவாடியில் நடைபெற்ற இந்த போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியில், பெரிய மாட்டு பிரிவில் 8 மைல் தூரத்துக்கும் சின்ன மாடு பிரிவு 6  கிமீ தொலைவுக்கு போட்டிகளின் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது.  இதே போன்று பெரிய குதிரை பிரிவில் 10 கிமீ  தொலைவுக்கு சின்ன குதிரை பிரிவில் 8 கி.மீ தொலைவுக்கு  இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது.ஒவ்வொரு பிரிவு போட்டிகளிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகள் சீறிப்பாய்ந்தன.ஒவ்வொரு பிரிவிலும் வீரர்கள் தங்களுடைய திறமைகளை காட்டி ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு சென்றனர்.இதில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் நடந்த போட்டியில் ஒரு மாட்டு வண்டி சாலையில் கீழே விழுந்தது இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசாக ரொக்க பணம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா,  மாவட்ட பொருளாளர் செந்தில், நகரச் செயலாளர் க. நைனாமுகமது மற்றும் நிர்வாகிகள் எம். எம். பாலு, ராமகிருஷ்ணன், அசோக் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News