22 தென்னை மரங்களை கொடுத்து 2022 ஆம் ஆண்டை வரவேற்ற மரம் நண்பர்கள்

எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கின்றனர்

Update: 2021-12-31 19:17 GMT

புதுக்கோட்டையில் மரம் நண்பர்கள் சார்பில் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் தென்னை மரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 2022 ஆம் ஆண்டை வரவேற்க 22 தென்னை மரங்களை கொடுத்து  மரம் நண்பர்கள் வரவேற்றனர்.

புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மரங்களை வளர்ப்பது குறித்த அவசியத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல் , சாலை ஓரங்களில் அதிக அளவில் மரம் நடும் பணியிலும் மரம் நண்பர்கள் சார்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அதேபோல் புதுக்கோட்டையில் நகராட்சியை பசுமை கோட்டையாக மாற்ற பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இன்று 2021 ஆம் ஆண்டு முடிந்து 2022ஆம் ஆண்டு பிறக்கும் 12 மணிக்கு மரம் வளர்ப்பது குறித்த அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் 22 தென்னை மரங்களை இரவு 12 மணிக்கு சாலைகள் வரும் பொதுமக்கள் சிறுவர்கள் என பலரிடமும் தென்னை மரங்களை வழங்கி 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்தில் மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இந்த நிகழ்வில் மரம் நண்பர்கள் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News