வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி

இப்பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 13.10.2021 (புதன்கிழமை) அன்று முதல் தொடங்கப்படவுள்ளது

Update: 2021-10-08 17:00 GMT

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் Staff Selection Commission நடத்தும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில், தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Staff Selection கமிஷன் பணியிடங்களுக்கான தேர்வானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்றும், இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசித் தேதி 25.10.2021 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு http://ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 13.10.2021 (புதன்கிழமை) அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின்போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் அவ்வப்போது மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் 

Tags:    

Similar News