இரண்டு இடங்களில் இயங்கும் உழவர் சந்தையால் வியாபாரிகள் வேதனை...

தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்

Update: 2021-05-12 06:41 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த24ம் தேதி வரை தமிழகஅரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இதனால் காய்கறி கடை மளிகை கடை தேனீர் கடை உள்ளிட்டவைகள் பகல் 12 மணி வரை இயங்கவும் உணவகங்களில் பார்சல் மட்டும் காலை மாலை இரவு என மூன்று வேளை குறிப்பிட்ட நேரத்தில் வழங்கவும், மருந்தகம் பால் நிலையம் எப்போதும்போல் செயல்படலாம் என்றும் மற்ற அனைத்து வகையான கடைகளும் முழுமையாக அடைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் தினசரி பகல் 12 மணி வரை காய்கறி வாங்க சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கிச் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று உழவர் சந்தை தற்காலிகமாக புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் பாதி கடைகள் மட்டும் தற்காலிக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகிறது இதனால் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது

உழவர் சந்தையில் உள்ள அனைத்து கடைகளையும் ஒரே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதித்தால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும் என்றும் வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

அதேசமயம் பொதுமக்களும் இரண்டு இடங்களில் கடைகள் செயல்படுவதால் பொருட்களை வாங்குவதற்கு இரண்டு இடத்திற்கு அலைய வேண்டி உள்ளது என்றும் கடந்த முறை உழவர் சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட வைத்தது போல் இந்த முறையும் அனைத்து கடைகளும் செயல்பட வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


Tags:    

Similar News