வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சாலை ஓரங்களில் இருக்கும் இயற்கை பானங்களை நாடிச் செல்லும் பொதுமக்கள்

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சாலை ஓரங்களில் இருக்கும் இயற்கை பானங்களை நாடிச் செல்லும் பொதுமக்கள் செல்கின்றனர்.

Update: 2021-04-22 13:45 GMT

தமிழகத்தைப் பொறுத்த வரை அக்னி நட்சத்திரம் துவங்கினால் மட்டுமே அதிகப்படியான வெயிலின் தாக்கம் இருந்து வரும். ஆனால் அதற்கு எதிர்மறையாக தற்போது கோடை வெயில் 102 டிகிரி செல்சியஸ் வரை பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலர் தற்போது இயற்கை பானங்களை நாடி செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வரும் நிலையில், பொதுமக்கள் தற்போது சாலையோரங்களில் விற்பனையாகும் இயற்கை பானங்களான கரும்புச்சாறு, நுங்கு, இளநீர், தர்ப்பூசணி பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழச்சாறுகள் மற்றும் நொங்கு போன்றவை அதிக அளவில் அருந்தி வருகின்றனர்.

அதன்படி புதுக்கோட்டை நகர பகுதிகளில் சாலை ஓரங்களில் தற்போது கோடை வெயிலின் காரணமாக அதிக அளவில் நுங்கு இளநீர் தர்பூசணி உள்ளிட்ட கடைகள் அதிக அளவில் போடப்பட்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இதுபோன்ற சாலையோர கடைகளில் குவிய தொடங்கியுள்ளனர்.

செயற்கையான பானங்களை அருந்தாமல் இயற்கையான பானங்களை அருந்தினால் தென்னை விவசாயம் தர்பூசணி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை..

Tags:    

Similar News