அரசு மற்றும் தனியார் பேருந்துகள்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை என புகார்

Update: 2021-08-31 16:18 GMT

புதுக்கோட்டை பழைய  பேருந்துநிலையத்தில் பேருந்தை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு இன்று ஆய்வு செய்தார்

புதுக்கோட்டையில் பேருந்துகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என வந்த புகார்களின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் முகக் கவசம் அணியாமல், பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்வதாகவும், அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு, பேருந்துகளில் செல்வதாகவும், ஆட்சியர் கவிதா ராமுக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இன்று மாலை, பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  அங்கிருந்து புறப்பட்டுச்சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் முக கவசம் அணியாமல் இருந்த பல பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட ஆட்சியர் உத்தரவிட்டார். சில பயணிகளுக்கு முகக் கவசம் அளித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பேருந்துகளில் அதிக கூட்டம் இருப்பதை கண்ட அவர், அரசு வழிகாட்டு விதி முறைப்படி குறிப்பிட்ட பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். சமூக இடைவெளி விட்டு பயணிகள் அமர வைத்து மீதமுள்ள பயணிகளை பேருந்தை விட்டு இறக்கி விட்டார். அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதித்ததுடன், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக பேருந்தின் உரிமையாளர் மீது நடவடிக்கையும் எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வு புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News