திருவப்பூர் மாசி தேரோட்டம்: களைகட்டிய கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம்

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்த திருவிழா தடை நீங்கியதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Update: 2022-03-07 15:29 GMT

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா தேரோட்டம்

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் என களைகட்டியது திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி மக திருவிழா கடந்த இருபத்தி ஏழாம் தேதி காப்பு கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு அலங்காரத்தில் முத்துமாரி அம்மன் பவனி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாசித் திருவிழாவில் முக்கிய நிகழ்வான  தேர் திருவிழா திங்கள்கிழமை  விமரிசையாக நடைபெற்றது.



கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக களையிழந்து இருந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு தற்போது தடை நீங்கியதால், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உற்சாகத்துடன்  பால்குடம் மயிலாட்டம், ஒயிலாட்டம், பறவைக் காவடி எடுத்து வந்த  நேர்த்திக்கடன்  செலுத்தி\னர்.  3அடி முதல் 10 அடி வரை வேல் குத்தி பக்தர்கள் நேர்த்தி  கோயிலுக்கு வந்து வழிபட்டனர். 

இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.இந்த நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, மாவட்ட முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

Tags:    

Similar News