புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டடிபட்ட சிறுவன்

துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு சுமார் 2.5 கிமீ தொலைவிலிருந்த புகழேந்தி தலையில் பாய்ந்தது

Update: 2021-12-30 06:45 GMT

துப்பாக்கி குண்டு காயமடைந்த சிறுவன் புகழேந்தி

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் போலீஸார் மேற்கொண்ட பயிற்சியின்போது வெளியேறிய துப்பாக்கி குண்டு அப்பகுதியில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தலையில் பாய்ந்ததில் காயமடைந்து ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. மையத்தில் காவலர்களுக்கும் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் இன்று காலை நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

 இன்று நடந்த பயிற்சியின் போது வெளியேறிய குண்டு அப்பகுதி குடியிருப்பில் வசித்து வரும் புகழேந்தியின் தலையில் பாய்நததில் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை நார்த்தாமலை அருகிலுள்ள பசுமலைப்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் புகழேந்தி (11). இவர் கொத்தமங்களப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

 தனது வீட்டின் முன்பு  இன்று காலை கலைச்செல்வன் அவரது மகன் புகழேந்தியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு சுமார் இரண்டரைக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பசுமலைபட்டியில் வீட்டின் முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி தலையில் பாய்ந்தது. உடனே புகழேந்தி அலறியபடி அங்கேயே சுருண்டு விழுந்தார். அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரது தந்தை கலைச்செல்வன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது புகழேந்தி தலையில் குண்டு பாய்ந்து படுகாயங்களுடன் சுருண்டு விழுந்து கிடந்தான். உடனடியாக புகழேந்தியை அப்பகுதி பொதுமக்கள் ஒரு காரில் ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் புகழேந்தியை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக மருத்துவர்கள் புகழேந்திக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் போலீஸ் துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் காவலர்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இந்த மையத்தில் தான் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News