இந்தியாவின் தலைவாசல் தமிழகம்தான்: கமலஹாசன்

டெல்லி அல்ல, என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தலைவாசல் தமிழகம்தான் இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். -மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பேச்சு.

Update: 2021-03-24 04:50 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், நம்முடைய 50 ஆண்டுகால சரித்திரத்தில் பெரிதாக ஒன்றும் யாரும் செய்துவிடவில்லை என்றும், செய்யவில்லை என்பது நமது குற்றசாட்டு இல்லை, போதவில்லை என்பது தான் நமது குற்றசாட்டு என்றும் சேவை என்பது தானம் இல்லை, மக்களின் உரிமை என்றும் இதுவரை ஏற்பட்ட காயத்திற்கு கட்டு மட்டுமே போடுகிறார்களே தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு இது வரை மருந்தை அவர்கள் வழங்கவில்லை என்றும் கமல்ஹாசன் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், நான் ஹெலிக்காப்டரில் வருவதை விமர்சனம் செய்பவர்கள், கஜா புயலின் போது இப்பகுதிகளுக்கு எப்படி வந்தார்கள், அப்போது ஹெலிக்காட்டரில் வந்தது அவர்களுடைய பணம் அல்ல,ஆனால் இப்போது ஹெலிகாப்டர் வருவத என்னுடைய பணம் என்றும் ஹெலிகாப்டரில் வருவதை கிண்டல் செய்பவர்கள், கஜா புயலின் போது நாங்கள் தரையில் இறங்கி வேலை செய்தோம் ஆனால் ஆட்சியாளர்கள் வான்வழி மார்க்கமாக வந்து சென்றனர் அதுவும் அரசாங்க பணத்தில், ஆனால் நான் என்னுடைய பணத்தை வரி கட்டி ஹெலிகாப்டரில் வருகிறேன். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் கமல்ஹாசன் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில்: கூட்டத்தில் ஒரு இளைஞர் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலை தமிழர்களுக்கே தர முடியுமா எழுப்பினார் அதற்கு பதில் சொன்ன கமல்ஹாசன் தமிழ் தமிழ் என்று சொன்னால் தமிழ் வாளராது தமிழை முறையாக உச்சரிக்க தெரிந்திருக்க வேண்டும், தமிழ் தமிழர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அந்தந்த பகுதி இளைஞர்களுக்கு 100 கிலோமீட்டக்குள் வேலை தரப்படும் என்றும் கேள்விகளுக்கு நான் அஞ்சுபவன் அல்ல என்றும் எல்லா கேள்விகளையும் தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கமல்ஹாசன் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், அரசியல் நான் மட்டும் செய்ய முடியாது என்றும் என்னுடன் மக்களும் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் வளமையான தமிழகத்தை உருவாக்க முடியும் என்றும் கமலஹாசன் பேசினார். மேலும் 21வது வயதிலிருந்து எனக்கு ஊதியத்தை உயர செய்தவர்கள் மக்கள் என்றும், என் மார்க்கெட் ரேட் ஏரிகொண்டே வந்தது என்றும் அதில் மிச்சப்படுத்திய பணத்தைத்தான் தற்போது தான் செலவு செய்து வருவதாகவும், அதேபோல் தனிமனிதர் வருமானத்தையும் உயர்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் நோக்கம் என்றும் கமல்ஹாசன் பேசினார்.

70 ஆண்டு காலமாக வறுமை கோட்டுக்கு மேல் கொண்டு செல்வோம் என்று கூறுகின்றனர், மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் உள்ளனர் என்றும் அவர்களை செழுமை கோட்டுக்கு கொண்டு செல்வதே எனது இலக்கு என்றும் அப்படி செய்யாததால் தான் கஜா கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்கள் சிரமபடமாட்டார்கள் என்றும் கமல்ஹாசன் பேசினார்.எங்களுக்கு பயம் டெல்லி அல்ல தமிழகம் தான் என்றும், நாம் இருக்கும் இடம் தான் நமக்கு மேலிடம் என்றும், என்னை பொருத்தவரை இந்தியாவின் தலைவாசல் தமிழகம் தான் என்றும் கமலஹாசன் பேசினார்.

Tags:    

Similar News