கோவிட் 19 சிகிச்சை மையத்திற்காக இன்று முதல் புறக்காவல் நிலையம்

Update: 2021-05-15 10:28 GMT

புதுக்கோட்டையில் இன்று திறக்கப்பட்ட கோவிட் 19 புறக்காவல் நிலையம்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை வார்டில் தினந்தோறும் ஏதாவது ஒரு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது . அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 தொற்று பாதித்து சிகிச்சை பெறுவதற்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கும் மருத்துவருக்கும் இடையே நீண்ட நேரம் பிரச்சனைகள் ஏற்பட்டு உறவினர்கள் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை செய்து வரும் சூழ்நிலை தினந்தோறும் இருந்து வந்த நிலையில் இன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவிட் 19 சிகிச்சை மையம் அருகே புறக்காவல் நிலையம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

5 காவலர்கள் அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் கோவிட் சிகிச்சை மையத்தில் தினந்தோறும் ஏற்படும் பிரச்சனையை தடுப்பதற்காக தற்பொழுது புறக்காவல் நிலையம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை மையம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது.

  குறிப்பிடத்தக்கது இன்று அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் நகர துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்



Tags:    

Similar News