கோவிட் நிவாரணத்தொகை: இலங்கை தமிழர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 9.1.2015 -ஆம் தேதிக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்கள் மட்டுமே இலங்கை தமிழராவர்

Update: 2021-10-14 17:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் கோவிட்-19 நிவாரண உதவித் தொகை ரூ.4,000 பெற விண்ணப்பிக்கலாம்.

 தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கோவிட்-19 (ஊழஎனை-19) நிவாரண உதவித் தொகை ரூ.4,000 வழங்க வேண்டியுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் 09.01.2015 -ஆம் தேதிக்கு முன்னதாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து காவல் நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வசித்து வருபவர்கள் மட்டுமேஇலங்கைத் தமிழர்களாக கருதப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கை தமிழர் குடும்பங்களைச் சார்ந்த நபர்கள் தங்களது விவரங்களை கோவிட்-19 நிவாரண உதவித் தொகை ரூ.4,000 பெற தாமாகவே முன்வந்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் தங்களது எல்லைக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலம் தனிவட்டாட்சியர் பிரிவிலும்) அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம்  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News