இலவச 2 ஏக்கர் நிலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளுக்கு கொடுத்த 2 ஏக்கர் நிலம் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை என விவசாயிகள் முற்றுகை.

Update: 2021-07-26 11:00 GMT

மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

கடந்த 2007ஆம் ஆண்டு தமிழக அரசு நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கருக பூலாம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன் அடைந்தனர். இதன் மூலமாக பயனாளிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச பட்டா அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் படத்துடன் வழங்கப்பட்டது.

இந்த பட்டாவை நடைமுறைபடுத்தவும, தாலுக்கா அலுவலகத்தில் சிட்டா அடங்கல் மற்றும் பட்டா பதிவு செய்வதற்கும் பயனாளிகள் முறையிட்டனர். ஆனால் இவர்களது முறையீடு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அலுவலர்களால் கண்டுகொள்ளப் படாமலே இருந்து வருகிறது. இதனால் பட்டா வைத்துள்ளவர்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர்.

இதனால் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் வழங்கப்பட்ட இலவச இரண்டு ஏக்கர் பட்டா இதுவரை கணக்கில் ஏற்ற படாமல் உள்ளதை, தற்போதைய தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக கணக்கில் ஏற்றி சிட்டாடங்கள் உள்ளிட்டவைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட முயன்றவர்களை போலீசார் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக அழைத்துச் சென்றனர்.



Tags:    

Similar News