சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

கறம்பக்குடி அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-28 08:05 GMT

கறம்பக்குடி அரசு மதுபான கடை அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் அரசு மதுபான கடை அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கம் வழியாக திருவோணம் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையின் எதிரே உள்ள ஒரு கடையில் மதுபான பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கறம்பக்குடி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த கடைக்கு சென்று பார்த்தபோது கடை பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் அம்மன் நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை கடையை திறந்து பார்த்த போது ரூ.28,340 மதிப்புள்ள 212 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து கரம்பக்குடி காவல் நிலைய போலீசார் கறம்பக்குடி சடையன் தெருவை சேர்ந்த நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News