அடிப்படை வசதிகள் செய்ய மக்கள் கோரிக்கை: உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்

உடையநேரிகாலனியில் சுமார் 200 குடும்ப மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

Update: 2021-08-26 11:30 GMT

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே உள்ள உடையநேறி காலனியில் உள்ள பொதுமக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியை கவிதா ராமு

அடிப்படை வசதிகள் தொடர்பான உடையநேரிகாலனிமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு, உடனடி நடவடிக்கை எடுத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள திருமலைராயமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட உடையநேரிகாலனியில் சுமார் 200 குடும்பத்தைச் சேர்ந்த 600 -க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.கூலி வேலை பார்த்து வாழ்வை நகர்த்தி வரும் இந்தக்காலனி மக்களுக்கு இதுவரையில் அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாததால் குடிநீர் மின்சாரம் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் 200 குடும்பங்களும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர்.

அதுமட்டுமின்றி, மின்இணைப்புகள் இல்லாததால், பள்ளி மாணவ, மாணவிகள் இருளில் படிக்க வேண்டிய அவல நிலையைப் பொறுத்துக் கொண்டு, தங்களது படிப்பை நகர்த்திச் சென்றனர். இப்பிரச்னை தொடர்பாக பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து, இன்று அந்த பகுதியை உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டாட்சியர் அபிநயாவுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தங்களின் கோரிக்கையை எந்த அதிகாரிகளும் செய்து கொடுக்காத நிலையில் நேற்று வைத்த கோரிக்கைகள் இன்று நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி பாராட்டினர்.

Tags:    

Similar News