ரமலான் பண்டிகை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் வழங்கல்

புதுக்கோட்டை, திருவப்பூர் நவாப் பள்ளிவாசல் சார்பாக ஈத்கா பள்ளி மைதானத்தில் ரமலான் முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது

Update: 2022-05-03 05:51 GMT

புதுக்கோட்டை திருவப்பூர் நவாப் பள்ளிவாசல் சார்பில் கவிநாடு ஈத்காமைதானத்தில் தொழுகை ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு ல மஞ்சப்பை மரக்கன்றுகள வழங்கப்பட்டது 

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை, திருவப்பூர் நவாப் பள்ளிவாசல் சார்பாக கவிநாடு கண்மாயின் கிழக்கில் உள்ள ஈத்கா பள்ளி மைதானத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு தொழுகை நடைபெற்றது. இந்த ரமலான் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக்கை கட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மஞ்சள்பையும் உலகம் வெப்ப மயமாதலை தடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நட வலியுறுத்தி அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளும் மஞ்சப்பை முக கவசங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி மரக்கன்றுகளை பெற்றுச் சென்றனர்.




Tags:    

Similar News