திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மழைநீர்

திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மழைநீர் உள்ளே புகுந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அவதியுற்றனர்

Update: 2021-11-15 08:09 GMT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழை நீரில் பள்ளிக்கு நடந்து செல்லும் ஆசிரியர்கள்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருக்கோகர்ணம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு பள்ளிகள் திறப்பதற்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை துவங்கியது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளில் மழைநீர் புகுந்ததால் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பல்வேறு இடங்களில் அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை இருந்து வருகிறது.

குறிப்பாக திருக்கோகர்ணம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தற்போது பெய்து வந்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மழை நீர் சென்று குளம் போல் தேங்கி நிற்பதால் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அவலம் இருந்து வருகிறது. மாணவ மாணவிகள் மழை நீரில் நடந்து சென்று பள்ளிக்கு செல்கின்றனர். அதேபோல ஆசிரியர்களும் பகுப்புகள் எடுப்பதற்கு மழை நீரில் நடந்து சென்று பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர்.

உடனடியாக நகராட்சி நிர்வாகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News