வீட்டிற்குள் புகுந்த மழை நீர்: சாலையிவ் தஞ்சமடைந்த பொதுமக்கள்

மழை நீடித்து வருவதால் நாங்கள் செய்வதறியாது சாலையிலேயே இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்

Update: 2021-11-10 06:00 GMT

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் பகுதியில்  குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழை நீர்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் குளம் உடைந்து உபரிநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்ததால் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழைநீரில் தத்தளித்து வருகின்றனர்

புதுக்கோட்டையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வரும் நிலையில் புதுக்கோட்டையில் நீர்நிலைகள் தனது முழு கொள்ளளவை எட்டி வருகின்றன.

இதேபோன்று, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பேராங்குளம் நிரம்பி ஒரு மதகு உடைந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சத்தியமூர்த்தி நகர குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது இதனால் 25க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.25 வீடுகளிலும் குடியிருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்

ஒவ்வொரு மழையின் போதும் இந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்து வருவதாகவும், இதனை சீர்செய்வதற்கு நகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது மழை நீடித்து வருவதால் நாங்கள் செய்வதறியாது சாலையிலேயே இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நகராட்சி சார்பில் மோட்டார் அமைத்து நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர் நிலை வரத்து வாரிகளை சீர் செய்யாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உடனடியாக நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வரத்து வரிகளை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News