புதுக்கோட்டை: தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-01-25 06:21 GMT

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்வு நடைபெற்றது.  

தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருவதால் தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

அதில் அதிக அளவில் கூட்டம் சேர்க்கும் விதமாக கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் இன்று ஜனவரி 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் தி.மு.க.  சார்பில் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மஜித் முபாரக் ஏற்பாட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் கலந்துகொண்டு மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், புதுக்கோட்டை விஜயா, தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா ,மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, நகர துணை செயலாளர் அப்பு காளை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளஞ்சேரன் முத்துசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News