புதுக்கோட்டையில் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி தொடக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஆண், பெண் குத்துச்சண்டை வீரர்கள் 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

Update: 2022-05-06 16:21 GMT

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும்  மாநில சப்-ஜூனியர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று மோதும் வீரர்கள்

 தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி  துவங்கியது.

புதுக்கோட்டைநகர் மன்றத்தில் தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலானஆண் ,பெண்சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டி 06,07,08.மூன்று நாட்கள் நடக்கின்றது.  பெண்கள் ஆண்கள் கலந்துகொண்ட குத்துசண்டைபோட்டி தொடங்கியது.  இதில்  மாநிலம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குத்துசண்டை வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாமல் இருந்து  வருகிறது. தற்போது வைரஸ் தொற்று தாக்கம் குறைந்துவிட்ட நிலையில்  தமிழக அரசு சார்பிலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் குத்துச்சண்டை போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகர மன்ற வளாகத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி 2022 - 2023 -க்கான குத்துச்சண்டை போட்டி நேற்று தொடங்கியது. இதில், பல்வேறு பிரிவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நீலகிரி, விருதுநகர் ,சேலம் ,ஈரோடு மதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இந்த போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த குத்துச்சண்டை போட்டியில் மொத்தம் இருபத்தி எட்டு உடல் எடை பிரிவில் இந்த போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் குத்துச்சண்டை வீரர்கள் மே 20 முதல் 26 தேதி வரை தேசிய சங்கமான பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடத்தப்படும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன்.பாஸ்கர் தலைமையில்  இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட  குத்துச்சண்டைக்கழகத் தலைவர் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார், செயலாளர் கார்த்திகேயன் குழுவினர்   செய்துள்ளனர்

Tags:    

Similar News