புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் ஆனித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Pudukottai Shanthanatha Temple Ani Festival Starts

Update: 2022-07-03 05:30 GMT

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில் ஆனித்திருவிழாவையொட்டி  நடைபெற்ற கொடியேற்ற விழா

புதுக்கோட்டை நகரின் மத்தியில்  பிரசித்தி பெற்ற சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலயம் உள்ளது.  இந்த  ஆலயத்தில் ஆனித்திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

இதையொட்டி கோயில் கொடிமரத்தில்  சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.கொடியேற்றத்தையொட்டி கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர். வருகிற 5-ஆம் தேதி ஆனி திருமஞ்சனத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. திருவிழா வருகிற 12- ஆம்  தேதி வரை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News