புதுக்கோட்டையில் மழையால் தரைப்பாலம் சேதம்: அமைச்சர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டையில் மழையால் சேதமடைந்த தரை பாலத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்.

Update: 2021-11-08 04:36 GMT

புதுக்கோட்டையில் மழையால் சேதமடைந்த தரை பாலத்தை ஆய்வு செய்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் புதுக்கோட்டையில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் குளங்கள் ஏரிகள் நிரம்பி விவசாய நிலங்களுக்குள் மழை நீர் புகுந்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுர் மங்கலத்து பட்டியில் தொடர் கனமழையின் காரணமாக அந்த பகுதியில் அமைந்துள்ள தரைதளத்தில் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகள் என பலர் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஒரு சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே உடனடியாக அந்த பகுதியில் அமைந்துள்ள தரைத்தளத்தை உயர்த்தி அமைத்துக் கொடுத்து மழைநீர் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அந்த தரை பாலத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News