புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் படுக்கை வசதிகள்

கொரோன நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் படுக்கை வசதிகள் உள்ளன

Update: 2021-05-04 14:30 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்திட போதுமான எண்ணிக்கையில்படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்கீழ்கண்ட மருத்துவமனைகள் மற்றும் இதர இடங்களில் மொத்தம் 2,060படுக்கைகள் உள்ளன.நோய் அறிகுறிகளுடன் உள்ள கொரோனா நோயாளிகளுக்குசிகிச்சையளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 450 படுக்கைகள், புதுக்கோட்டை மாவட்டத்தில்மொத்தம் 1,110 படுக்கைகள்தயார் நிலையில் உள்ளது

மேலும் நோய் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்குசிகிச்சையளிக்க 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 படுக்கைகள், குடுமியான்மலை ஸ்டாமின் வேளாண்துறை விடுதியில் , புதுக்கோட்டை பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ விடுதியில் புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில்விராலிமலை ஐ.டி.ஐ யில் அறந்தாங்கிபாலிடெக்னிக் கல்லூரியில் புதுக்கோட்டைமகளிர்கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் என மொத்தம் 950 படுக்கைகள்ஏற்படுத்தப்பட்டுள்ளது

அதேபோல் ஆக்சிசன்  வசதி படுக்கைகள், தீவிர சிகிச்சைபிரிவு படுக்கைகள் 72 மற்றும் ஆக்சிஸன் இல்லா படுக்கைகள் 1,564படுக்கைகள் என மொத்தம் உள்ள 2,060 படுக்கைகளில் 400 நோயாளிகள்அறிகுறிகளுடனும், 142 நோயாளிகள் அறிகுறிகளின்றியும் மொத்தம் 542நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சையிலுள்ள நிலையில் 1,518படுக்கைகள் காலியாக உள்ளது.

மேலும் படுக்கைகள் அதிகம் தேவைப்பட்டால் அவற்றை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சைக்கானமருத்துவமனைகள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்த தகவல்கள் மற்றும்விபரங்களுக்கு 04322-1077, 04322-222207 மற்றும் 75388 84840 என்றதொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்


Tags:    

Similar News