புதுக்கோட்டை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் திமுகவினர், வீடுகள் தோறும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Update: 2021-05-04 08:00 GMT

தமிழகம் முழுவதும் திமுக அதிகப்படியான இடங்களை கைப்பற்றி திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் திமுகவின் வெற்றியை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் நரிமேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாக திமுக நிர்வாகியான பழனிவேல் மற்றும் திமுகவினர் இன்று ஒவ்வொரு வீடாகச் சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 5 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர் அதனை கொண்டாடும் விதத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்வில் திமுக வட்ட பிரதிநிதி பழனிவேல்அவைத்தலைவர் கருப்பசாமி , பாண்டியன், மதன் குமார் ,மனோஜ் , அழகிரிசாமி, சிங்கமுத்து, பசீர் அகமது , சரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News