புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்கள் தொடர்பாகவும், வார்டு வாரியாக களப்பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

Update: 2022-01-26 10:30 GMT

 பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன்

 புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில்  திலகர்திடல் எம்.எஸ். திருமண மகாலில் மாவட்ட தலைவர் ராம.சேதுபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட நகராட்சிகளில் மொத்தம் 69 வார்டுகளுக்கும், அன்னவாசல், அரிமளம், இலுப்பூர்,கீரனூர், கறம்பக்குடி,ஆலங்குடி, கீரமங்கலம், பொன்னமராவதி ஆகிய பேரூராட்சிகளின் 120 வார்டுகளுக்கும் நடைபெறவுள்ள தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்கள் தொடர்பாகவும், வார்டு வாரியாக நடைபெற்றுள்ள களப்பணி நிலவரங்களை பரிசீலிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில், ராமேஸ்வரம் கோட்ட அமைப்புச் செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட பார்வையாளர் பி.எம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சி தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி. கணேசன், மாவட்ட பொதுச் செயலாளரும், பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளருமான சிவசாமி ஆகியோர் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் குறித்து ஆய்வுப் பட்டியல் வெளியிட்டு பேசினர்.

முன்னாள் மாவட்ட தலைவர் தாமரைச் செல்வம், மாவட்ட பொருளாளர் ஏ.சி.எஸ். மணிகண்டன் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கசாமி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட பொதுச் செயலாளர் சிஆர் பாலு அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News