கன மழையால் வெள்ளக்காடான புதுக்கோட்டை மற்றும் கிராமங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெயில் அடித்து மழை நீர் வடிய தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Update: 2021-11-15 15:15 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் வெள்ளக் காடான புதுக்கோட்டை நகர் மற்றும் கிராமங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று  மாலை பெய்த கனமழையால்  புதுக்கோட்டை நகரம் மற்றும் கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியது.

புதுக்கோட்டையில் இன்று மாலை முதல் சுமார் மூன்று மணி நேரமாக கனமழை பெய்தது இதன் காரணமாக நகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருக்கும் ஏரிகள் குளங்கள் உடைந்து நீர் வெளியேறி தாழ்வான பகுதியில் சூழ்ந்ததால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மழை நீரால் வீட்டில் மாட்டிக்கொண்ட பொதுமக்களை பாதுகாப்புடன் மீட்டு வெளியேற்றினர். வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்தது இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரி குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெயில் அடித்தது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மழை நீர் வடிய தொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று மாலை  மீண்டும் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் ஏற்கெனவே தனது முழு கொள்ளளவை எட்டியிருந்த குளங்கள் ஏரிகள் இன்று பெய்த கனமழையால் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெள்ளம் போல சாலைகளிலும் தெருக்களிலும் தாழ்வான பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், திருக்கட்டளை பகுதியில் இருக்கும் புளிகுண்டு குளம் நிரம்பி மழை நீர் அருகில் உள்ள பசுமை நகர் பகுதி முழுவதும் சூழ்ந்தது. மழைநீரில் மாட்டிக்கொண்ட அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை, தீயணைப்பு படை வீரர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.

தற்போது பெய்த கனமழைக்கு புதுக்கோட்டை நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்கு, புதுக்கோட்டைக்கு கனமழை உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தால் புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News