மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடனை கட்ட சொல்லி, கட்டாயப் படுத்தக்கூடாது : கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடனை கட்ட சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என கலெக்டர் உமாமகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-07 08:31 GMT

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஷ்வரி (பைல் படம்)

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்நிதி வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் கடன் தவணைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிய கூறியிருப்பது

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அறிவிப்பு.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்று நுண்கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகின்றன.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்நிதி வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மூலம் கடன் தவணைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது.

மேலும் பேரிடர் காலத்தில் வீடுகளுக்குச் சென்று தவணைத்தொகை கட்டுமாறு நிர்பந்தம் செய்யக்கூடாது மேலும் நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் புகார் ஏதேனும் இருந்தால் 18001021080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்


Tags:    

Similar News