புதுக்கோட்டை காவலர்களுக்கு 11 கொரோனா தடுப்பு உபகரணங்களை போலீஸ் எஸ்பி வழங்கினார்

புதுக்கோட்டைமாவட்டகாவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை போலீஸ் எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்.

Update: 2021-05-25 07:15 GMT

புதுக்கோட்டையில் உள்ள போலீசாருக்கு ஏஸ்பி. பாலாஜி சரவணன் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதில் முன்கள பணியாளர்களாக தொடர்ந்து பணியாற்றிவரும் காவலர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்களுக்கும் நீர் ஆவி பிடிக்கும் கருவி,சனிடைசர், முகக் கவசம், கபசுர குடிநீர் பொடி,வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட 11 பொருட்கள் அடங்கிய தொகுப்பை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களிடம் வழங்கினார்.

அப்போது எஸ் பி பாலாஜி சரவணன் பேசுகையில்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காவலர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பு கவசங்களை அணிந்து பணியாற்றவேண்டும்

 காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வழிவகை செய்து கொள்ள வேண்டும் அதற்கு உதவிகரமாக இந்த தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags:    

Similar News