புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி ஆர்வத்துடன் குவிந்த பொதுமக்கள்

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆர்வத்துடன் இன்று குவிந்த பொதுமக்கள்.

Update: 2021-07-01 07:07 GMT

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது. இன்று காலையிலேயே 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வத்துடன் குவிந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி தான் என்று தமிழக அரசும் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. தற்போது பொது மக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தற்போது தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அதிகளவில் வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய தடுப்பூசி வழங்காததால் நேற்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தடுப்பூசி முகாம்  இன்று துவங்கியது. காலையிலேயே 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வத்துடன் குவிந்தனர்.

Tags:    

Similar News