அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவி மய்யம்

புதுக்கோட்டை அரசு மருதூதுவமனையில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் உதவி மய்யம் துவங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-05-16 15:30 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்சிகிச்சைக்கு உதவிடும் வகையில் வழிகாட்டுதல்களை வழங்கும் தன்னார்வலர்களின் பணியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று தமிழ் நாட்டிலேயே முதன்முதலாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைத்தனர்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் வழிகாட்டுதல்களை வழங்கும் தன்னார்வலர்களிடம் அமைச்சர் கூறும்பொழுது நோய் தொற்று ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்கு எந்த வார்டில் அவர்களை சேர்ப்பது என்பது குறித்த பதட்டத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் வருவார்கள் அவர்களை முறையாக அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டுகளுக்கு கொண்டு செல்லும் பணியை நீங்கள் சிறப்பாக செய்ய வேண்டும்

முதலில் பதட்டத்துடன் வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் எதற்காக மருத்துவமனைக்குள் வந்துள்ளார்கள் மருத்துவமனைகள் எந்த நோய்க்கு எந்த வார்டுக்கு செல்லவேண்டும் என்று அவர்களிடம் முறையாக எடுத்துக் கூறி அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்

வைரஸ் தொற்று காலத்தில் தற்பொழுது நீங்கள் செயல்படும் பணி மிக மகத்தான பணி இதற்காக தமிழக அரசு உங்களுக்கு விருதுகளும் பணமுடிப்பும் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பேசினர்

Tags:    

Similar News