புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள், திடீர் போராட்டம் பரபரப்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-14 14:08 GMT
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் 367 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் 6,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தினசரி இரு சக்கர வாகனத்தில் வந்து செல்வதாகவும் நாளொன்றுக்கு பெட்ரோல் மட்டுமே 100 ரூபாய்க்கு போடக் கூடிய சூழ்நிலை உள்ளதாகவும் இதனால் தங்களுக்கு போதிய ஊதியம் இல்லை என்றும் தினசரி எட்டு மணி நேரம் பணிபுரிந்து வரும் எங்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டும்

 அதேபோல் தமிழக முதலமைச்சர் அறிவித்த 15,000 ரூபாய் ஊக்கத்தொகை அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கையை வலியுறுத்தி இன்று மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மருத்துவ கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்யப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News