புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்தால் சிகிச்சைக்கு கலெக்டர் அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி தென்பட்டால் , உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரவேண்டும் என்று கலெக்டர் உமாமகேஷ்வரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-23 11:30 GMT

கலெக்டர் உமா மஹேஸ்வரி 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் ஒரு சிலர் முயூகோர்மைக்கோஸிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும்போது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சர்க்கரை நோய்பாதிப்பு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எச்ஐவி எய்ட்ஸ் போன்ற வைரஸ் தொற்று மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணிலும், கண்ணைச் சுற்றியும் கடுமையான வலி, காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், ரத்த வாந்தி,மனச்சிதைவு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

எனவே, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மேற்கொண்ட நோய் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசுமருத்துவமனைகளுக்கு விரைந்து சென்று உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News