புதுக்கோட்டையில் வாகன தணிக்யைில் 900 போலீசார், எஸ்பி பாலாஜி சரவணன் பேட்டி

புதுக்கோட்டையில் தளர்வில்லா

Update: 2021-05-24 06:46 GMT

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கில் போலீசார் வாகனதணிக்கை செய்வதை போலீஸ் எஸ்பி. பார்வையிட்டார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

இதனால் புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள அனைத்து வகையான காய்கறி மார்க்கெட் மளிகை கடைகள் வர்த்தக வணிக நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

பாலகம் மருந்தகம் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு பார்சல் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வருகின்றது. இதனால் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது,

முக்கிய சாலைகளில் பாரி கார்டுகளை வைத்து தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் வாகன தணிக்கை பணிகளை ஆய்வு செய்து ஊரடங்கு காலகட்டத்தில் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்

 மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் 10 சோதனை சாவடிகளும் உட்பகுதிகளில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 900 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .

வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் உரிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள. கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இன்று முதல் அரசின் விதிமுறைகளை மீறி பொதுவெளிக்கு வரும் நபர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் எஸ்பி பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News