புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2021-11-23 05:59 GMT

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 39-வது வார்டு புல் பண்ணை சாலையில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

புதுக்கோட்டை நகராட்சியைப் பொறுத்தவரை 42 வார்டு நகராட்சிகள் இருக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து புதுக்கோட்டை நகராட்சி உள்ள 42 வார்டுகளிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவு நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் .

தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பல்வேறு வீதிகளில் இன்றும் சாலைகளில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் மழைநீருடன் கலந்து வீட்டின் அருகில் நிற்பதால் தற்போது கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்றவை பரவும் சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 39 வார்டு புல்பண்ணை சுப்பிரமணிநகர் 1வது 2வது 3வது வீதிகளில் தொடர்ந்து பெய்த மழை நீருடன் பாதாளச் சாக்கடை கழிவு நீரும் கலந்து வீட்டின் அருகில் நிற்பதால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக அந்த கழிவுநீரை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று புல்பண்ணை சாலையில் திடீரென 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர் நாகராஜ் உடனடியாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என கூறி அடுத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News