பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம்: மீன்வளர்ப்பு விவசாயிகள் பயன்பெறலாம்

Fish Farming Government Scheme - புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அலகிற்கும் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Update: 2022-08-06 06:30 GMT

Fish Farming Government Scheme -புதுக்கோட்டை மாவட்டத்தில்பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் மீன்வளர்ப்பு விவசாயிகள் 22.08.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையின் அரசாணையின்படி பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் ((PMMSY) 2021-22-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (GC) 40% மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு (SC) 60%  மானியமும் கூடிய எட்டு புதிய திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

உயிர் கூழ்ம திரள் (Bio Floc) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தின் கீழ் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 அலகிற்கும், உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் வெட்டுதல் மற்றும் புதியதாக கட்டப்பட்ட உவர்நீர் இறால் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேருக்கு ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 ஹெக்டேருக்கும், புறக்கடை- கொல்லைப்புற அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் (கடல்நீர் மற்றும் நன்னீர்) திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 அலகிற்கும், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுக்கும் (கடல்நீர் மற்றும் நன்னீர்) திட்டத்தின் கீழ் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 அலகிற்கும், மீன் விற்பனை ஊர்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 அலகிற்கும், புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் 5 ஹெக்டேருக்கும், நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டில் 5 ஹெக்டேருக்கும், சிறிய அளவிலான உயிர் கூழ்ம திரள் (Bio Floc) குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 அலகிற்கும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கேற்ற வாறு திட்டவழிகாட்டு நெறிமுறைகளின் படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பத் திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News