காவல்துறை சார்பு ஆய்வாளர் பணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் எழுத்துத் தேர்வு

Police Sub Inspector job examination in 2 centers in Pudukkottai district

Update: 2022-06-23 12:30 GMT

புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு ஜூன் 25 -ல் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் வெளியிட்ட தகவல்: தமிழக காவல்துறையில் 2022-ம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதி லுமுள்ள 39 தேர்வு மையங்களில் 444 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு வரும் 25.06.2022 (சனிக்கிழமை) அன்று பொது விண்ணப்பதாரர் களுக்கு  (Open Candidates) காலை மற்றும் மதியம் நடைபெற வுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2879 ஆண் விண்ணப்ப தாரர்களுக்கும் 1153 பெண் விண்ணப்பதாரர்களுக்கும்  (மொத்தம்: 4032) எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதங் கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

2) விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெ.ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 2 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

3) எழுத்துத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட பொருட்களை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

 அழைப்பு கடிதம் (Call Letter).

 அடையாள அட்டை (Call Letter ).

 பரிட்சை அட்டை (Writing pad).

 கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா (Blue or Black ball Point Pen).

4) மேற்கண்ட பொருட்களை தவிர வேறு எதையும் உதாரணமாக செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதலியன கண்டிப்பாக தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

5) விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று Main written Exam தேர்விற்கு காலை சரியாக 08.30 மணிக்கும் தமிழ் தகுதி தேர்விற்கு பகல் சரியாக 02.00 மணிக்கும் தங்களது தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து தெரிந்து  வரவேண்டும்.

6) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்விற்கு சிறப்பு மேற்பார்வையாளராக மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்.சந்தோஷ்குமார்  அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

7) புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் 25.06.2022ம் தேதி காலை 06.00 மணி முதல் இயக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News