புதுக்கோட்டையில் காங்கிரஸ்கட்சி ஊர்வலத்தை போலீஸார் தடுத்துநிறுத்தியதால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-11-27 07:45 GMT

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தும் காவல் துறையினரால் பரபரப்பு ஏற்பட்டது

  புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு தடுத்து நிறுத்திய காவல்துறையால் பரபரப்பு

தமிழகம் முழுவதும்  இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் செயலை கண்டித்தும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை விலை உயர்வை ஏற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சின்னப்பா பூங்காவில் இருந்து கேஸ் விலை உயர்வை கண்டித்து ஊர்வலமாக சென்று  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட முயன்ற  காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  நகர காங்கிரஸ் கட்சி தலைவர் இப்ராஹிம் பாபு, முன்னாள் நகரமன்ற தலைவர் துரை திவ்யநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News