புதுக்கோட்டை குளக்கரையில் மரம் மரக்கன்றுகள் நடவு: எம்எல்ஏ முத்துராஜா தொடக்கம்

புதுக்கோட்டை அருண்மொழியின் ஓயாத அலைகள்- மரம் அறக்கட்டளை இணைந்து பிள்ளையார்கோயில் குளக்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது

Update: 2021-10-05 08:30 GMT

புதுக்கோட்டையில் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ முத்துராஜா

 புதுக்கோட்டை பிள்ளையார்கோயில் குளக்கரையில் மரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை,  புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா தொடக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்ப்பதில் பொது மக்களுக்கு தற்போது ஆர்வம் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்காகும். அதைப்போல், தன்னார்வ அமைப்புகள், ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு சார்பில் அதிக அளவில் தற்போது மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அருண்மொழியின் ஓயாத அலைகள் மற்றும் மரம் அறக்கட்டளை இணைந்து, கீழ2ஆம் வீதி பிள்ளையார் கோயில் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.

நிகழ்வில் புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டப் வை.முத்துராஜா கலந்து கொண்டு மரக்கன்று நடும் நிகழ்வை தொடக்கி வைத்தார். நிகழ்வில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி மோகன்ராஜா, வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், தொழிலதிபர் ரெங்கராஜ்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில், எம்.எம். பாலு, செல்வம், குணசேகரன், மனோ, மோகன், பாலு, மலையப்பன் , பரமன், சுரேஷ், பரத், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அருண்மொழியின் ஓயாத அலைகள் அமைப்பு மற்றும்  கண்ணன், மரம் அறக்கட்டளை மரம்ராஜா  ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

Similar News