நகர் பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க ஆணையரிடம் மனு

நகர பகுதியில் இரவு, பகல் நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதற்கு புதுக்கோட்டை நகராட்சி ஆணையரிடம் நடவடிக்கை மேற்கொள்ள மனு.

Update: 2021-07-27 10:00 GMT

புதுக்கோட்டை நகர பகுதிகளில் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகிறது. இதனால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. பலர் உயிர் இழந்த நிலையிலும் ஒரு சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டும் சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜயை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நேரில் சந்தித்து நகரப் பகுதிகளில் இரவு நேரம் மற்றும் பகல் நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் அதிக அளவில் விபத்து நடைபெறுவதால் உடனடியாக இந்த மாடுகளை பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.

இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், சங்க துணை தலைவர் இப்ராஹிம் பாபு, செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் பிரசாத் துணைச் செயலாளர் ராஜா முஹம்மது, பீர்முகம்மது, பைரவ சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News