பெரியார் பிறந்த நாள்:உருவச்சிலைக்கு புதுக்கோட்டை திமுக சார்பில் மரியாதை

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் சமூக நீதி நாள் உறுதி எடுத்துக்கொண்டனர்

Update: 2021-09-17 09:43 GMT

புதுக்கோட்டா மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று பெரியாரின் 173வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவருடைய புகைப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்வில், மாவட்ட பொருளாளர் செந்தில் , சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, நகர கழக செயலாளர் நைனாமுகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம். எம் பாலு ,புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

 பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை கட்சி நிர்வாகிகள் எடுத்துக்கொண்டனர்.

 

Tags:    

Similar News