புதுக்கோட்டையில் கோவாக்சின் தடுப்பூசி டோக்கன்களை பறித்துச் சென்ற பொதுமக்கள்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தடுப்பூசி முகாமில் கோவாக்சின் தடுப்பூசி டோக்கன்களை பறித்துச் சென்ற பொதுமக்கள்

Update: 2021-07-29 06:38 GMT

புதுக்கோட்டை சந்தப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பு முகாமில் தடுப்பூசி  டோக்கனை பறித்துச் சென்ற பொதுமக்கள்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது தவணை  போடுபவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலையிலிருந்தே குவிந்தனர்.

 தடுப்பூசி போடுவதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட பொழுது,  டோக்கன்களை வழங்கியவரிடமிருந்து பொதுமக்கள் முண்டியடித்து டோக்கனை பறித்துக் கொண்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் பொதுமக்களை வரிசைப்படுத்தி தடுப்பூசி போடுவதற்காக டோக்கன்களை வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு  தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்காக டோக்கன்களை பறித்துச் சென்ற பொதுமக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

Tags:    

Similar News